அரியானா தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர் ரயிலில் அனுப்பி வைப்பு

 

ஈரோடு, ஆக. 23: ஈரோட்டில அரியானா தேர்தல் பாதுகாப்புக்கு 390 துணை ராணுவத்தினர். சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு 334 துணை ராணுவத்தினர், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு வீரர்கள் 56 பேர் என மொத்தம் 390 பேர் வந்திருந்தனர். இதையடுத்து 390 பேரும் ஈரோட்டில் இருந்து 22 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் நேற்று மாலை 4 மணியளவில் அரியானாவுக்கு புறப்பட்டனர். மேலும், ரயில் செல்லும் பாதையில் துணை ராணுவத்தினர் ஆங்காங்கே ஏறி அரியானா பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரியானா தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர் ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: