தமிழக முதல்வரை பார்த்து வடமாநில எம்.பி.க்கள் வியப்பு

*ஆ. ராசா எம்.பி. பேச்சு

கோத்தகிரி : இந்தியா கூட்டணி கட்சிகளின் வேகமான, வீரியமான பணிகளை பார்த்துதான் இந்திய அரசியல் சட்டத்தை முடக்காமல் அதனை திருத்தாமல் மத்திய அரசு இருப்பதற்கு காரணம் இந்தியா கூட்டணியை கட்டமைத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை பெருமிதம் கொள்கிறோம் என கோத்தகிரியில் வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
அரவேனு மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் எம்பி. ஆ.ராசா பேசுகையில், ‘‘இந்தியா கூட்டணி கட்சிகளின் வேகமான வீரியமான பணிகளை பார்த்துதான் இந்திய அரசியல் சட்டத்தை முடக்காமல் அதனை திருத்தாமல் ஒன்றிய அரசு இருப்பதற்கு காரணம். இந்தியா கூட்டணியை கட்டமைத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை பெருமிதம் கொள்கிறோம்.

1980களில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என தபால் ஊழியர்களை (மணி ஆர்டர்) வந்துள்ளதா என எதிர்பார்த்து காத்திருந்த காலம் மாறி தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியில் புதுமை பெண் திட்டம், தங்கமகன் திட்டம் போன்ற திட்டங்களால் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வளவு சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சரை கண்டு வட மாநில எம்பிக்கள் ஆச்சரியப்படுவதாக கூறினர்.

நீலகிரி மாவட்டத்திற்கு எந்தெந்த தேவைகள் வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில்‌, கே.எம். ராஜூ, இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், சதகத்துல்லா, மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள் பரமேஷ்குமார், வாசிம்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் போஜன், பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், ஒன்றிய அவைத்தலைவர் கில்பர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரி,

துணைத் தலைவர் உமாநாத், கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், ஜக்கனாரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சுரேஷ், கொணவக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன், குஞ்சப்பனை கவுன்சிலர் அற்புதராஜ், கமலம் சேகர், கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் மு.க. கணபதி, ஜாபர், பூமணி, கற்பகம், இளைஞரணி அந்தோனி, நிஷாந்த், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மணிகண்டராஜ், விவேகானந்தன், அசார் கான், அகல்யா, தங்கேஷ், சோயா தங்கவேலு, சுசில் ஜீவானந்த், இளந்தென்றல் பாபு, தாமரைச்செல்வன், வழக்கறிஞர் அணி குயிலரசன், மணிக்குமார், விவேக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழக முதல்வரை பார்த்து வடமாநில எம்.பி.க்கள் வியப்பு appeared first on Dinakaran.

Related Stories: