மகாராஷ்டிராவில் பள்ளியில் சிறுமிகளிடம் அத்துமீறிய குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ரயில் மறியல் போராட்டம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பட்லாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த 4 வயது சிறுமிக்கு பள்ளியின் காவலாளி பாலியல் தொந்ததரவு கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிறுத்தி பட்லாப்பூர் பகுதியில் இருக்க கூடிய ரயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பட்லாப்பூரில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக பட்லாப்பூர் ரயில் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

4-வயது சிறுமியை கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை போக்சோ வழக்காக பதிவு செய்யாத காவல் ஆய்வாளருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் முதல்வர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கடுமையான நடவடிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் பள்ளியில் சிறுமிகளிடம் அத்துமீறிய குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: