இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய உயர் நீதிமன்ற பணியாளர்கள், உயர் நீதிமன்ற காவல்துறை காவலர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி பரிசு மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கி கவுரவித்தார். இதை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக நீதிபதிகள் சார்பில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை வழங்குவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், ெமட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லூயிசாள் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் பி.செல்வராஜ், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு பார்கவுன்சிலில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இணை தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 10.30 மணிக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலையை பொறுப்பு தலைமை நீதிபதி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஜெயச்சந்திரன், சிவஞானம், சி.சரவணன், பட்டு தேவானந்த், ராஜசேகரன், பவானி சுப்பராயன், என்.செந்தில்குமார், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாவர் ஆர்.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உறுப்பினர் எம்.வேல்முருகன், எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் துரை கண்ணன், வழக்கறிஞர்கள் அணுகுண்டு ஆறுமுகம், ஏற்காடு ஆ. மோகன் தாஸ், ஆர்.சீனிவாசராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா; பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கொடியேற்றினார்: புதுப்பிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை திறந்துவைப்பு appeared first on Dinakaran.