சென்னை: இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது. என்ஐஆர்எப் தரவரிசைகள் 2024-ல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது.
நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம். நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தாய்ப்பான திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் மென்மேலும் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது appeared first on Dinakaran.