தேவர்மலை மேலப்பகுதியில் ₹78.63 லட்சத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணி

கரூர், ஆக. 12: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் தேவர்மலை, மேலப்பகுதி மற்றும் தரகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ரூ.78.63 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ. 32.80 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்ட பணி, களத்துப்பட்டியில் கமலம் என்பவரின் விளைநிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 1.54 லட்சம் மதிப்பில் மண்வரப்பு அமைக்கப்பட்ட பணி ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வெரியம்பட்டியில் மூக்கன் என்ற பயனாளி கலைஞரின் கனவு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு ரூ. 3.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு, பயனாளி கட்டுமான பணியின்போது உடனிருந்து பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, மேலப்பகுதி ஊராட்சி கருச்சிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ 7.99 லட்சம் மதிப்பில் பொது மயானம் கட்டப்பட்டு வரும் பணி, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 32.80 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூ டுதல் வகுப்பறை கட்டிடங்களின் தன்மை குறித்தும் என மொத்தம் ரூ.78.63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, முடிவுற்ற பணிகளை தவிர நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடித்து உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தபட்ட துறை அலுவலகள் மற்றும் பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின போது, திட்ட இயக்குநர் லேகா தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், முத்துக்குமார் உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
தேசிய அடையாள அட்டை புதுப்பித்திட வரும் மாற்றுத்திறனாளிகள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் இந்த அலுவலகத்தில் ஏற்கனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும்.மேலும், விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் தொலைபேசி எண் 04324 257130 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

The post தேவர்மலை மேலப்பகுதியில் ₹78.63 லட்சத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணி appeared first on Dinakaran.

Related Stories: