இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பார்சல் படகுடன் பறிமுதல்

மண்டபம் : ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு சமையல் மஞ்சள், கஞ்சா, வலி நிவாரணி மாத்திரை மற்றும் பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் பீடி இலைகள் உள்ளிட்டவைகளை கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்திய, இலங்கை சர்வதேச கடலோரப் பகுதியில், இலங்கை கடற்படையினர் கடந்த 2 மாதங்களில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 7ம் தேதி மாலை, புத்தளம் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், படகு ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் பீடி இலைகளை, தமிழக கடலோரப் பகுதியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் படகில் இருந்த ரூ.2 லட்சம் இலங்கை மதிப்பிலான 21 பார்சல் அடங்கிய 683 கிலோ பீடி இலைகள் மற்றும் பைபர் படகினையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பார்சல் படகுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: