×

கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

 

கறம்பக்குடி, ஆக.10: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் சாலையில் வெள்ளையனே வெளியேறும் இயக்க நினைவு நாளில் ஒன்றிய அரசை வழி நடத்தும் கார்ப்பரேட் கொள்ளையர்களை வெளியேறு என்று சொல்லி ஐக்கிய முன்னணிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருஞானம் தலைமை வகித்தார்.

சந்திரசேகரன், அருங்குனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சார்பாக மாவட்ட பொருளாளர் பால சுந்தரமூர்த்தி கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சேசுராஜ், ரெங்கசாமி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : United Farmers Front ,Union Government ,Karambakudi ,Villiyaane Quit Movement ,Ambukovil Mukum Road ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...