ஒன்றிய அரசின் திருத்தசட்டங்களை திரும்பப்பெறக்கோரி பெரம்பலூரில் இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஆக. 10: பெரம்பலூரில் இ.கம்யூ. கட்சியின்சார்பில் முப்பெ ரும் சட்டங்களில் திருத்தம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியில் நேற்று 3 புதிய சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடந்தது.

இந்தியக் கம்யூ. கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன் விளக்கவுரை ஆற்றினார். பின்னர் 3 குற்றவியல் சட்ட நகல்கள் எரிக்க முற்பட்டபோது, பெரம்பலூர் போலீசார் தடுத்து, சட்ட நகல்களையும் ஏறியூட்டும் சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இ.கம்யூ.கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலைசெல்வன், ராஜேந்திரன், கல்யாணி, கலிய பெருமாள், பழனிச்சாமி, அரும்பாவூர் ஆறுமுகம், வரதராஜன், சின்னத்துரை, வால்பாறை மாணிக்கம், நடராஜன், ஜெயா விஜயராணி உட்பட 30-க்கும் மேற் பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய அரசின் திருத்தசட்டங்களை திரும்பப்பெறக்கோரி பெரம்பலூரில் இ.கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: