திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் ஊராட்சி, கோட்டை காலனி மற்றும் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் மக்கள் தொகையும் அதிகரித்தது. எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் நஜீம்பாபு, இளநிலை பொறியாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் மஞ்சு லிங்கேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம், ஒன்றிய பொருளாளர் தா.நடராஜன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் லிங்கேஷ்குமார், வி.எஸ்.சதீஷ், எம்.கௌதம், மாவட்ட பிரதிநிதி கொப்பூர் டி.திலீப்குமார், கிருஷ்ணன், கே.பாஸ்கர், டி.ரகு, பா.கலையரசன், எஸ்.ஏழுமலை, விக்ரம், என்.ராஜேந்திரன், ஆர்.கமலகண்ணன், ஏ.கார்த்தி, மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருப்பாச்சூர் ஊராட்சியில் புதிய மின்மாற்றிகள் இயக்கம் appeared first on Dinakaran.