ஒரு கிலோ அவரைக்காய் காராமணி ரூ.60ல் இருந்து ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.70ல் இருந்து ரூ.65க்கும், சேனைக்கிழங்கு ரூ.75ல் இருந்து ரூ.65க்கும், பாவக்காய் ரூ.50 இருந்து ரூ.40க்கும், சேம கிழங்கு ரூ.50ல் இருந்து ரூ.40க்கும், காலிபிளவர் ரூ.50ல் இருந்து ரூ.30க்கும், நூக்கல் ரூ.50ல் இருந்து ரூ.35க்கும், தக்காளி ரூ.55ல் இருந்து ரூ.25க்கும், வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.25க்கும், கத்திரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், பீர்க்காங்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், சவ்சவ் முள்ளங்கி ரூ.30ல் இருந்து ரூ.20க்கும், புடலங்காய் கோவைக்காய் ரூ.30ல் இருந்து ரூ.25க்கும், கொத்தவரங்காய் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.150ல் இருந்து ரூ.50க்கும், கேரட் ரூ.150ல் இருந்து ரூ.100 க்கும், பீட்ருட் ரூ.50க்கும், உருளை கிழங்கு ரூ.45க்கும், காராமணி ரூ.40க்கும், சுரக்காய் ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.30க்கும், வெள்ளரிக்காய் ரூ.20க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பட்டாணி ரூ.200ல் இருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், கடந்த 2 மாதமாக வரத்து குறைவால் காய்களின் விலை அதிகமாக இருந்தது. இன்று காலை 700 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்துள்ளது. அதனால் விலை சற்று குறைந்துள்ளது. இம்மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருக்கும்’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்வு காய்கறி விலை குறைவு appeared first on Dinakaran.