இதுதொடர்பாக சிமிலி மணியின் தாய் ரேணுகா, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தொடர்ந்து, மறுநாள் காலை எஸ்எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் ரூபன், சங்கர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, எஸ்எஸ்ஐ சிவக்குமார் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, போலீசார் ரூபன், சங்கர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்த நிலையில், கைதிகளை எஸ்எஸ்ஐ தாக்கும் வீடியோ நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் மாநகர கமிஷனர், சம்பவம் குறித்து உண்மை கண்டறியும் விசாரணையை நடத்த பள்ளிக்கரணை மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் நியமித்துள்ளார். இதற்கிடையில், எஸ்எஸ்ஐ சிவகுமார் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
The post பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கைதிகளை தாக்கிய எஸ்எஸ்ஐ பணியிடமாற்றம்: உண்மை கண்டறிய உத்தரவு appeared first on Dinakaran.