தமிழகத்தில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்… லிஸ்டில் யார், யார் தெரியுமா?

சென்னை : தமிழகம் மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த உத்தரவு:

*சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பி எஸ். சக்தி கணேசன், சென்னைப் பெருநகர உளவுத்துறை துணை ஆணையராக நியமனம்.

*மதுரை தென் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி சுஜித் குமார், பெருநகர சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம்.

*ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் எஸ்பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம்.

*சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*ராமநாதபுரம் கடலோர காவல் படையின் எஸ்பி டி.என்.ஹரிகிரண் பிரசாத் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமனம்.

*திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கே.கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*திருநெல்வேலி கிழக்கு சரக துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்பி புக்யா சினேகா பிரியா, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

*சென்னை பூக்கடை சரக துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கவுதம் கோயல் சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன், நாகை மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*விருதுநகர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான், கரூர் மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*நீலகிரி மாவட்ட எஸ்பி பி.சுந்தரவடிவேல், சென்னை பூக்கடை சரக துணை ஆணையராக நியமனம்.

*சென்னை காவல் தலைமையகத்தின் உதவி ஐஜி டி.கண்ணன், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*தாம்பரம் காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி, கோயம்பேடு சரக துணை ஆணையராக நியமனம்.

*மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*கரூர் மாவட்ட எஸ்பி கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னைப் பெருநகர பாதுகாப்பு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஷ்வரன், தருமபுரி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீநிவாசன், தென்காசி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*தமிழ்நாடு பால் கூட்டுறவு கழக ஊழல் கண்காணிப்பு எஸ்பி எஸ். மேகலினா இடென், சென்னை காவல்துறை தலைமையகத்துக்கும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர்.

*பெருநகர சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையர் டி.ரமேஷ்பாபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்… லிஸ்டில் யார், யார் தெரியுமா? appeared first on Dinakaran.

Related Stories: