×

தீ விபத்தில் மூதாட்டி பலி

ஈரோடு, ஆக. 8: ஈரோடு அடுத்த ஊஞ்சலூர் கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (78). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (70). கடந்த 1ம் தேதி பழனியம்மாள் வீட்டில் வெந்நீர் வைப்பதற்காக விறகு அடுப்பினை கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் பற்ற வைக்க முயன்றார். அப்போது, எதிர்பாரதவிதமாக அடுப்பில் பற்ற வைத்த தீ பழனியம்மாளின் சேலையில் பரவி எரிய துவங்கியது.

இதனால், வலியால் பழனியம்மாள் கூச்சலிட, சத்தம் கேட்டு பழனிசாமி வந்து பழனியம்மாளை மீட்டார். இதில் இரண்டு கால், வயிற்றுப்பகுதி, இடது கை விரல்களில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீ விபத்தில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Palaniswami ,Oonjalur Karukampalayam ,Palaniammal ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு