×

விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறி, பூக்களின் விலை உயர்வு

ஈரோடு,செப்.7: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஈரோட்டில் காய்கறி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஈரோடு மார்க்கெட்டில், வெள்ளை பூசணிக்காய் (கிலோ) ரூ.30, சர்க்கரை பூசணிக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.60, தக்காளி ரூ.20 முதல் ரூ. 30, வெண்டைக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.70, முள்ளங்கி ரூ.40, முட்டைகோஸ் ரூ.30, புடலைங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, முருங்கை காய் ரூ.40க்கு விற்பனையானது. அதேபோல, கோயில்களில் இன்று சிறப்பு பூஜை,மலர் அலங்காரங்கள் நடக்க உள்ளதால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களுக்காக மூட்டை மூட்டையாக பூக்கள் வாங்கிச் செல்லப்பட்டது.

சில்லறை வியாபாரிகளும், தங்களின் வியாபாரத்துக்காக வழக்கத்தை விட அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். இதில், மல்லிகைப்பூ (கிலோவில்) ரூ.1,000, முல்லைப்பூ ரூ.800, ஜாதிப்பூ ரூ.600,சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.280 முதல் ரூ.300, மாலை தயாரிக்கப் பயன்படும் கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.200, ரோஜா பூ ரூ.400, துளசி ரூ.60, வாடாமல்லி ரூ.120 முதல் ரூ.160, மருகு கட்டு ரூ.20க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.70க்கும், விற்பனையானது.

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறி, பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi ,Erode ,
× RELATED நாடு முழுவதும் தொடரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்..!!