×

மின்னணு பணப்பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருள் பெறும் வசதி

 

ஈரோடு,செப்.10: ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பிரதான வேளாண் விரிவு மையங்களில் விவசாயிகள் மி்ன்னணு பணபரிவர்த்தனை மூலம் தேவையான வேளாண் இடுபொருட்கள் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் வேளாண் இடுபொருட்கள் நேரடியாக ரொக்கம் கொடுத்து பெற்று வந்தனர்.

தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள்,உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள்,ஜிங்க், சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து பிரதான வேளாண் விரிவாக்க மையங்களிலும் ஏடிஎம் அட்டை, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதி மூலம் பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதான வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.. எனவே இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மின்னணு பணப்பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருள் பெறும் வசதி appeared first on Dinakaran.

Tags : Erode ,Joint Director ,Venkatesh ,
× RELATED சில்லரை விற்பனையாளர்கள் உரங்களை...