இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கோரினார் ஏற்றுகொள்ளப்படுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கேட்டால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார்.
ஒன்றிய அமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்புக்கு பதில், மன்னிப்புகோரி பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி செய்தியாளர் சந்திப்பின்போது அவதூறு ஒரு கருத்து தெரிவித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் தான் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதற்க்குள் ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரி அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
The post பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.