×

முத்துப்பேட்டை அருகே உப்பூரில் ரயில் மோதி தொழிலாளி பலி

முத்துப்பேட்டை, ஆக. 7: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (37). இவர் முத்துப்பேட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள ரைஸ்மில்லில் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியவர் செல்லும் வழியில் மலம் கழிப்பதற்காக உப்பு அருகே உள்ள ரயில்வே தண் டவாளத்திற்கு அருகே சென்றுள்ளார்.

அப்போது எதி ர்பாராத விதமாக இரவு 7.45 மணியளவில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கூலித் தொழிலாளி ரவி படுகாயமடைந்து உயிர் இழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலம் கழிப்பதற்காக சென்ற போது தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post முத்துப்பேட்டை அருகே உப்பூரில் ரயில் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Uppur ,Muthuppet ,Muthupet ,Ravi ,Muthupet Periya Shop Street ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளுக்கு கல்வி வழிகாட்டி புத்தகங்கள் வழங்கல்