×

அரசு பள்ளிகளுக்கு கல்வி வழிகாட்டி புத்தகங்கள் வழங்கல்

 

முத்துப்பேட்டை, செப்.6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டார பகுதியில் தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் உள்ள பள்ளிகள் மற்றும் நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயோமேக்ஸ் உள்ளிட்ட பாட சம்பந்தப்பட்ட வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மற்றும் இடும்பாவனம் அரசு உயர்நிலை பள்ளி உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர;நீதிமன்ற வழக்கறிஞர் மகாலிங்கம் கலந்துக்கொண்டனர். இதில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் கோவி.ரெங்கசாமி, தமிழ் இலக்கிய மன்ற கௌரவ தலைவர் ராஜமோகன், உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் சூரியநாராயன, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். அதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 23 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கபட்டது.

The post அரசு பள்ளிகளுக்கு கல்வி வழிகாட்டி புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Tamil Education Foundation ,Muthupet, Tiruvarur ,
× RELATED முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி