×

பொதுமக்களின் கனவான வீடு கட்டும் திட்டத்தில் எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் அனுமதி பெறலாம்: சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு

சென்னை: சுயசான்றின் அடிப்படையில் இணையவழி மூலம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறையில், பொதுமக்கள் தங்களின் கனவான வீடு கட்டுவதற்கு எளிமையான முறையில் குறைந்த கட்டணத்தில் அனுமதியைப் பெற்று பயன் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் பெரும்பாலான அனுமதிகள் தனிவீடு கட்டும் நடுத்தர மக்களுக்காக வழங்கப்படுபவை. ஆதலால் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் எளிதாக வழங்கும் நோக்கில் சுயசான்றிதழ் அடிப்படையில் இணையவழி மூலம் சமர்ப்பித்த உடனே வெளிப்படை தன்மையுடன் கூர்ந்தாய்வு கட்டணம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில், 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் (அல்லது) தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டிடங்கள் ஒப்புதல் வழங்கும் நடைமுறையினை முதல்வர் கடந்த 22ம் தேதி தொடங்கி வைத்தார்.

இவ்வாறு ஒப்புதல் வழங்குவதற்கு நெறிமுறைகளை வகுத்து வசூலிக்கப்படவேண்டிய கட்டணங்களையும் குறிப்பிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இம்முறையில் அனுமதி வழங்கும்போது கட்டிட அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ. 100 வசூலிக்கப்பட வேண்டும். இந்த திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் கனவான தனி வீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்யும் நோக்கில் அமைத்துள்ளது. வணிக நோக்கத்தோடு கட்டுபவர்களுக்காக கொண்டு வரப்படவில்லை. மேலும் சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிக்கான கட்டணங்கள் ஏற்கனவே உள்ள கட்டணங்களுக்கும் எந்த விதமான வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது.

மேலும் ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதி கட்டணம் சற்று அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அந்தக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது. நடுத்தர வர்க்க பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த திட்டத்தின் பலன்களை பெறுவதை தடுக்கும் நோக்கில் தவறான கருத்தினை பொதுமக்கள் மத்தியில் பதிவு செய்வதற்காக சிலர் முயற்சி செய்கிறார்கள். எனவே, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடுத்தர மக்கள் முறையாக பயன்படுத்தி கொண்டு, வீடு கட்டுவதற்கு எளிமையான முறையில் அனுமதியினை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

* சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிக்கான கட்டண விவரம்

எண் விவரம் கட்டணம்
சதுர
மீட்டருக்கு (ரூ) கட்டணம்
சதுர
அடியில்
1. வளர்ச்சி கட்டணம் 15 –
2. கட்டிட அனுமதி கட்டணம் 600
3. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி கட்டணம் 267
4. சாலை வெட்டு சீர் செய்யும் கட்டணம் 194
மொத்தம் 1076 100

* சென்னை மாநகராட்சியில் அனுமதி வழங்கும்போது ஏற்கனவே வசூலிக்கப்படும் கட்டண விவரம்
வ. எண் விவரம் வசூலிக்கப்
படும் கட்டணம்
சதுர அடிக்கு
1. வளர்ச்சி கட்டணம் 1.40
2. கட்டிட அனுமதி கட்டணம் 7.60
3. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலநிதி கட்டணம் 24.80
4. சாலை வெட்டு சீர் செய்யும் கட்டணம் (தோராயமாக 13.5 ச.மீ சாலை வெட்டு பரப்பளவு) ரூ.4525 ஒரு ச.மீ கட்டணம் 22.60
5 மழைநீர் சேகரிக்கும் அமைப்பு 20 ச.மீ ஒரு ச.மீ கட்டணம் 230 8.80
6. கீழ்நிலை நீர்தேக்க தொட்டி 20 ச.மீ ஒரு ச.மீ கட்டணம்230
7. மேல்நிலை நீர்தேக்க தொட்டி 20 ச.மீ ஒரு ச.மீ கட்டணம் 230
8. கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி
20 ச.மீ ஒரு ச.மீ கட்டணம் 230
9. சுற்று சுவர் கட்டுவதற்கு 20 ச.மீ ஒரு ச.மீ கட்டணம் 230 99.70
10. உள்கட்டமைப்பு மற்றும்
மேம்பாட்டு கட்டணம் 34.80
மொத்தம் 199.70

The post பொதுமக்களின் கனவான வீடு கட்டும் திட்டத்தில் எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் அனுமதி பெறலாம்: சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Kumaraguruparan ,Chennai ,
× RELATED வடசென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து...