×

1008 மாற்றுத்திறனாளி குழந்தைகள் திருமலைக்கு தனி ரயிலில் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் 1008 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தனி ரயிலில் திருமலைக்கு அழைத்துச் சென்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு ஆலோசனைக் குழுவும், சென்னை ரோட்டரி சங்கமும் இணைந்து சுமார் 1008 கண்பார்வையற்ற, வாய் பேசமுடியாத, ஊனமுற்ற, அனாதைக் குழந்தைகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமலைக்கு அழைத்துச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மீகப் பயணத்தை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழு முன்னாள் தலைவர் ஏ.ஜெ.சேகர் மற்றும் சென்னை ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தத் தனி ரயிலில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனி கேட்டரிங் அமைக்கப்பட்டு அவர்களுக்கு காலை, இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மீகப் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலையில் அமைந்துள்ள அன்னதானக் கூடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 1008 மாற்றுத்திறனாளி குழந்தைகள் திருமலைக்கு தனி ரயிலில் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Minister Shekharbabu ,Chennai ,Tamil Nadu Advisory Committee of Tirumala Tirupati Devasthanam ,Chennai Rotary Association ,Minister ,Shekharbabu ,
× RELATED மார்கழி மாதத்தில் திருப்பதி...