77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டையில் ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சிக்கான ஒத்திகை நேற்று காலை கொட்டும் மழையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடந்தது. வரும் 15ம் தேதி கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடி கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுவது போல், காவ்லதுறை அதிகாரி ஒருவரை முதல்வர் போன்று வேட்டி, சட்டை அணிந்து கான்வாயில் வருவது போல் அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை முதல்வர் ஏற்றுவது போன்றும், அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது போன்றும் ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் நேற்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை தடை செய்யப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டையில் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: