விமான நிலையம் வளாகத்தில் உள்ள வணிக வளாகம், திரையரங்குகளுக்கு வரும் வாகனங்களும் ஒரே பாதையிலேயே வெளியேறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறுகின்றன. வருகை பகுதியில் இருந்து 500மீ தொலைவில் பன்னடுக்கு பார்க்கிங் உள்ளதால் பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் உள்நாட்டு முனையம் அருகேயே பார்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை. பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக விமான நிலையம் தரப்பில் கேட்டபோது இதற்கு தீர்வு காணும் வகையில் பன்னடுக்கு கார் பார்க்கிங் அருகில் பயணிகளை ஏற்றுவதற்கான இடம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
The post சென்னை விமான நிலையத்தில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் தடுமாறும் ஓட்டுநர்கள்: டோல்கேட்டில் கட்டண கொள்ளை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.