ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

 

ஊட்டி, ஆக. 5: நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் தணிக்கை செய்வதற்கு விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள், அரசு துறைகள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் தணிக்கையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதார திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான தகுதிகள், விதிமுறைகள் பற்றி கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட இணைய தளமான nilgiris.nic.inல் காணலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிங்கர்போஸ்ட், நீலகிரி 646006 என்ற முகவரிக்கு வரும் 12ம் தேதி மாலை 3 மணி அளவில் அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

The post ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: