கோவிலம்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் மின்விசிறி கழன்று விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்

 

வேளச்சேரி, ஆக.5: கோவிலம்பாக்கம், கணபதி நகரை சேர்ந்த விநாயகம் என்பவர், நேற்று முன்தினம் இரவு தனது தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட சென்றனர். அங்கு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து மின் விசிறி திடீரென்று கழன்று விழுந்ததில், விநாயகத்தின் மகளான 3 வயது சிறுமி பிரனிகாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஓட்டலில் மின் விசிறி கழன்று விழுந்து 3 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோவிலம்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் மின்விசிறி கழன்று விழுந்து 3 வயது சிறுமி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: