அதேபோல் காவல் ஜெனரல் பிரிவு ஐஜியாக இருந்த செந்தில்குமார் மேற்கு மண்டல ஐஜியாகவும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாகவும், காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும், மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக இருந்த மகேந்திர குமார் ரத்தோட் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாகவும், சமூகநீதி மற்றும் மாநில மனித உரிமை ஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி காவல் ஜெனரல் பிரிவு ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், காவலர் நலன் பிரிவு ஐஜியாக இருந்த நஜ்முல் ஹோடா காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாகவும், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாகவும், திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த பிரவேஷ் குமார் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை கமிஷனராகவும், சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை கமிஷனராக இருந்த அபிஷேக் தீட்சித் சென்னை ரயில்வே டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த துரை காவலர் நலன் பிரிவு டிஐஜியாகவும், சென்னை பெருநகர வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த தேவராணி வேலூர் சரக டிஐஜியாகவும், வேலூர் சரக டிஐஜியாக இருந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை பெருநகர கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.