- தமிழ்நாடு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- வேலூர்
- ராணிப்பேட்டை
- Tirupathur
- திருவண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் இரவு 9 மணிக்குள் மழை பெய்யக் கூடும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், பல்லாவரம், போரூர், வானகரம், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. பெரம்பூர், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.