×

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவதொரு புதிய நோய் மக்களை பயமுறுத்திக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது குரங்கு அம்மை. காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்ததை தொடர்ந்து பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபருக்கு அந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.குரங்கு அம்மை அறிகுறிகளுடன் நேற்று அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதியானது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எம்.பாக்ஸ் தொற்று உள்ள நபர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று clade 2 வகையை சார்ந்தது. பாதிக்கப்பட்ட நபருக்கு clade-2 வகை தொற்று உறுதியாகியுள்ளதால் அஞ்சத்தேவையில்லை.

“clade-1 வகை எம்.பாக்ஸ் தொற்றை தான் மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது, இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை. இந்தியாவில் எம்.பாக்ஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பரவும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளற்றது.

The post இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,India ,Democratic Republic of the Congo ,EU government ,Dinakaran ,
× RELATED விலைவாசி உயர்வு; ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: முத்தரசன்