×

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

மதுரை : மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500கோடி மதிப்பிலான கடன் உதவியையும் வழங்கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 வெற்றி என்பது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்த நற்சான்று. மக்களை தேடிவந்து அரசின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்தாண்டு ரூ.30,0755 கோடி வங்கிக்கடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை ரூ. 14,000 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த ஏராளமானோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். மகளிர் சிரமப்படக்கூடாது, குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கே காலை உணவு திட்டம். மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 520 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் மட்டுமே 21 கோடி இலவச பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ள்ளனர். காலை உணவு திட்டத்தை அரசுப் பள்ளியில் மட்டுமின்றி அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்துள்ளார் முதல்வர். காலை உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். மதுரையில் மட்டும் தினந்தோறும் 80,000 பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 7 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 15,000 மாணவ, மாணவிகள் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1.18 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 4.62 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK government ,Minister ,Udayanidhi Stalin ,Madurai ,
× RELATED பல்வேறு சீர்மிகு திட்டங்களால்...