சென்னை: கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, ரூபி மனோகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பொன்குமார் பேசுகையில், ‘‘ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டுமானத்துறைக்கு எந்த சலுகையும் இல்லை. ஜி.எஸ்.டியை குறைத்தல், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துதல் போன்ற எந்த அறிவிப்புகளையும் வெளியிடாமையைக் கண்டித்தும், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள், கட்டுமான துறையின் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜி.எஸ்.டியை 5% குறைத்திட கோரியும் ஆகஸ்ட் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஓன்றிய அரசின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன’’ என்றார்.
The post பொன்குமார் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து வரும் 6ம் தேதி போராட்டம் appeared first on Dinakaran.