×

குழந்தைகள் கூடி மகிழும் இடமாக மாற்றிய இளைஞர்கள் ஆடி பெருக்கை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஊட்டி, ஆக. 4: ஆடி பெருக்கை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழர்களின் பண்டிகைகளில் முதல் பண்டிகையான ஆடிபெருக்கு (ஆடி 18) விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். மேலும், விவசாயிகள் ஆடி பெருக்கின் போது, புதிதாக விவசாய நிலங்களில் பயிர் செய்ய துவக்குவர். மேலும், மக்கள் ஆறுகளின் கரைகளில் ஆடி பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில், நேற்று ஊட்டியில் உள்ள மாரியம்மன் ேகாவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுநடந்தது. மேலும், பெரும்பாலான மக்கள் புத்தாடைகளை உடுத்தி ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடினர். இதில், ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

The post குழந்தைகள் கூடி மகிழும் இடமாக மாற்றிய இளைஞர்கள் ஆடி பெருக்கை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Amman ,Nilgiris ,Aadi Arupta ,Adi Peruku ,Adi 18 ,
× RELATED சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன்...