இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் அன்புக்குரியோரை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள். பேரிடரின்போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் வீரர்களின் தைரியத்திற்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் appeared first on Dinakaran.