செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்: டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பேட்டி


சென்னை: ‘செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்’ என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நாளைக்கு 5 முறையாவது பேட்டி கொடுத்து வந்தார். அதாவது, பிரசாரத்துக்கு புறப்படும் போது ஒரு பேட்டி, பிரசாரம் முடிந்த பிறகு ஒரு பேட்டி, பிரசாரத்தின் இடையே ஒரு பேட்டி, விமான நிலையத்தில் இறங்கும்போது பேட்டி, விமானத்தில் ஏறி செல்லும்போது ஒரு பேட்டி என்று யார் மைக்கை நீட்டினாலும் பேட்டி கொடுத்து வந்தார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜ தோல்வியடைந்தது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன்- அண்ணாமலை ஆகியோர் வார்த்தை போரால் மோதிக்கொண்டனர். இருவரது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இதன் எதிரொலியாக டெல்லி தலைமை தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை என இரண்டு பேரையும் எச்சரித்தது. அதன் பிறகு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் ‘‘இனிமேல் வாழ்க்கையில் ஏர்போர்ட்டில் பேசவே மாட்டேன். என்று அறிவித்தார்.டெல்லி மேலிடம் பேட்டி கொடுப்பதில் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர் ஒருவர், அண்ணாமலை சார் திடீர் டெல்லி பயணம் ஏன்? என்றார். ‘‘ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன் ராஜா. இனி டிரை பண்ணாதீங்க ராஜா” என்று மட்டும் கூறி விட்டு சென்று விட்டார்.

The post செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்: டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: