அவனியாபுரம்: சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?’’ என்றனர். இதற்கு, ‘‘இது குறித்து நான் ஏதும் கருத்து சொல்ல விரும்பவில்லை’’ என்றார். ‘ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டத்தை செங்கோட்டையனே ஏற்பாடு செய்திருக்கிறாரே? உங்களிடம் ஏதும் பேசினாரா?’’ என்றதற்கு, ‘‘செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றதிலிருந்து என்னிடம் பேசவில்லை’’ என்றவரிடம், ‘‘உங்களுடன் ஆலோசனைக்கு பிறகே என்டிஏ கூட்டணியில் சேர உள்ளதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளாரே?’’ என்றதற்கு, ‘என்னிடம் ஏதும் அவர் கூறவில்லை’’ என்றார். ‘‘ஒன்றிய, அரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி ஒதுக்கீடு குறித்து உங்கள் கருத்து?’’ என்றதற்கு, ‘‘100 நாள் வேலை திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை வர உள்ளது. அதை 100 சதவீதம் ஒன்றிய அரசு கொடுத்து கொண்டிருந்தது. தற்போது 40 சதவீதம் பங்கு தமிழக அரசு என்று சொல்கிறார்கள்’’ என்றார். தொடர்ந்து ஓபிஎஸ், ‘‘எங்களது ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது. செயல்திட்டம், முடிவுகள் குறித்து அறிய அதுவரை பொறுத்திருங்கள். பார்ப்போம்’’ என்று கூறி கிளம்பிச் சென்றார்.
தவெகவிற்கு சென்ற பின் செங்கோட்டையன் பேசவில்லை டிடிவி என்டிஏ கூட்டணியில் சேர என்னிடம் ஆலோசிக்கவில்லை: ஓபிஎஸ் பேட்டி
- செங்கோட்டையன்
- தவேகா
- TTV
- என்டிஏ
- OPS
- Avaniyapuram
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- மதுரை விமான நிலையம்
- சென்னை
- திருப்பரங்குன்றம்
