சென்னை: அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டங்கள் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டு தற்போதுவரை 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் வரும் 5ம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருந்த புதுச்சேரி, கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான கலந்தாலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.