வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் அறிவுரை

 

ராமநாதபுரம், ஆக.2: நீதித்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றுக்கிடையே ஆன ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்தார். எஸ்பி சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தனர். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கு விசாரணை உதவி இயக்குனர், அரசு வழக்குரைஞர்கள், அரசு கூடுதல் வழக்குரைஞர்கள், அரசு உதவி வழக்குரைஞர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுப்பது, விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், காவல்துறை மற்றும் நீதித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜா, மகிளா விரைவு நீதிமன்ற கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை மோகன்ராம் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: