×

38 மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் கூட்டம்: அரசு ஏற்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் 38 கல்வி மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கல்வி மேம்பாட்டுக்காக 38 கல்வி மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாதத்தில் ஒரு நாள் மேற்கண்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும்.

அதில் பள்ளி மாணவ மாணவியரின் கல்வி சார்ந்த தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துரையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 38 மாவட்டங்களில் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள் கூட்டம்: அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Govt. ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Tamil Nadu School Education Department ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...