பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் 3வது பதக்கம் வென்ற இந்தியா வீரர் ஸ்வப்னில் குசேல்!!

பாரீஸ்: துப்பாக்கிச்சுடுதலில் 3வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. 2024ல் பாரீஸில் ஜூலை 26ல் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஸ்வப்னில் குசேல் 451.4 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கை தொடர்ந்து ஸ்வப்னில் குசால் 3வது வெண்கலத்தை வென்றார். இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

The post பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் 3வது பதக்கம் வென்ற இந்தியா வீரர் ஸ்வப்னில் குசேல்!! appeared first on Dinakaran.

Related Stories: