கேந்திராதிபத்ய தோஷம்

நம் கண்களுக்கு ஒளிபட்டு எதிரொளி ஏற்படுவதால்தான் எந்த ஒரு பொருளும் கண்களுக்கு புலப்படுகிறது. ஒளியின்றி எதிரொளிக்கப்படாமல் இருக்கும்போதும் அதிக இருளும் உள்ள சூழ்நிலையில் எந்த பொருளும் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அதுபோலவே, அதிக பலம் பொருந்திய கிரகமும் அதிக பலமற்ற கிரகமும் இயங்காத தன்மையையும் பெறுகிறது.அதுவே தோஷமாகும்.கேந்திரம் என்பது மையம் என்பதாகும்.ராசிக்கட்டங்களில் மையங்களாகவும் கிரகங்கள் பலம் பெறக்கூடிய இடமாகவும் உள்ளவை கேந்திரங்கள் ஆகும். இந்த கேந்திரங்களாகிய லக்னம் (1ம்) பாவகம் ஜாதகர், நான்காம் (4ம்) பாவகம் என்ற தாய் ஸ்தானம் அல்லது சுகஸ்தானம். சப்தம (7ம்) பாவகம் அல்லது களத்திரஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் (10ம்) எனும் தொழில் ஸ்தானம் ஆகும்.கேந்திர பாவங்களுக்குரிய காரக கிரகங்கள் கேந்திரங்களிலேயே இருப்பது தோஷமாக உள்ளது. அந்த தோஷமே கேந்திராதிபத்ய தோஷம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அது என்ன செய்யும்? அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை விரிவாக காண்போம்.

கேந்திராதிபத்ய தோஷம் என்பது என்ன?

சுபகிரகங்கள் கேந்திரங்களில் ஆட்சியோ உச்சமோ பெறும் பொழுது அதிக பலம் அடைகின்றன. அவ்வாறு அதிக பலம் சுபகிரகங்கள் கேந்திர ஆதிபத்திய காரகங்களாக இருக்கும் பட்சத்தில் அவை உச்ச பட்ச வலிமை பெற்று செயலற்று போகின்றன இவ்வாறு செயலற்று போவதால் அந்த கிரகம் ஜாதகருக்கு தோஷத்தை தருகின்றது. அந்த சுபகிரக காரகங்கள் வழியே அசுபத்தை செய்வதால் இதனை கேந்திராதிபத்ய தோஷம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
தோஷத்திற்கான உறவுகளும் அமைப்புகளும்…
தாய், உணவு – சந்திரன்
ஆசிரியர் (குரு)
குழந்தைகள் – வியாழன்
மனைவி (களத்திரம்) – சுக்ரன்
மாமன் / நண்பர்கள் – புதன்

லக்ன (1ல்) பாவகத்தில் வியாழன் அல்லது புதன் அமரும் பொழுது நண்பர்கள் வழியாகவும் குழந்தைகள் வழியாகவும் தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது.நான்காம் (4ம்) பாவகத்தில் சந்திரன் அமரும் பொழுது தாய் மற்றும் தாய் வழி உறவுகள் வழியே தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது. சிலருக்கு எப்பொழுதும் ஹோட்டல்களில் மட்டும் உணவு உண்ணும் அமைப்பை ஏற்படுத்தும்.ஏழாம் (7ம்) பாவகத்தில் சுக்ரன் அமரும் பொழுது மனைவி மற்றும் பெண்கள் தொடர்பிலும் தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது.பத்தாம் (10ம்) பாவகத்தில் செவ்வாய் அல்லது சூரியன் அமரும் பொழுது தொழில் தொடர்பான அமைப்புகளில் தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாக உள்ளது. இதில், காரக பாவ நாஸ்தி என்னும் ஜோதிட விதியும் வருகிறது
.
இந்த தோஷங்களில் ஏதேனும் விதிகள் மற்றும் விதிவிலக்கு உண்டா?

சுபகிரகங்களான சந்திரன், சுக்ரன், புதன், வியாழன்ஆகியவை அதிகமாக கேந்திர ஆதிபத்யத்தை தோஷத்தை கொடுக்கும். இவை கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்து ஆட்சி, உச்சம் என்ற அமைப்பை பெறும் பொழுது பாவக ஆதிபத்தியங்களில் சிலவற்றை கொடுத்து சிலவற்றை கெடுத்து விடும் அமைப்பை செய்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.சுபகிரகங்களோடு ஏதேனும் அசுப கிரகங்கள் இருப்பின் கண்டிப்பாக கேந்திராதிபத்ய தோஷம் குறைய வாய்ப்புகளை தருகிறது. சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்கும்போது சுபதன்மை பெற்று கேந்திர வலிமை பெறும்பொழுது கேந்திராதிபத்ய தோஷத்தை செய்கிறது. அதே சந்திரன் தேய்பிறையாக இருக்கும் பொழுது கேந்திராதிபத்ய தோஷம் குறைகிறது எனச் சொல்லலாம்.பொதுவாகவே உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு அதிகபட்சமாக கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்தும். காரணம் இரண்டு பாவங்களுக்குரிய கிரகங்கள் ஒரே கிரகமாக வியாழனும் புதனும் இருப்பதால் அதிகமான தோஷங்கள் உண்டாகிறது.ஏதேனும் அசுப கிரகங்களின் பாவ கிரகங்கள் பார்வை இருப்பின் கேந்திராதிபத்ய தோஷம் குறைய வாய்ப்புகள் உண்டு.

லக்னங்கள் அடிப்படையில் கேந்திராதிபத்ய தோஷம்…

மேஷ லக்னத்திற்கு – நான்காம் (4ம்) பாவகத்தில் வளர்பிறை சந்திரன் அமர்ந்தாலும் சப்தம ஸ்தானமாகிய (7ம்) பாவகத்தில் சுக்ரன் அமர்ந்தாலும் அது கேந்திராதிபத்ய தோஷமாகும். சில பலன்களை செய்வதில்லை. ஆட்சி பெறும் பொழுது ஒன்றை கொடுத்து மற்றொன்றை கெடுக்கும்.
ரிஷப லக்னத்திற்கு – கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.மிதுன லக்னத்திற்கு – லக்னாதிபதி புதனும் நான்காம் (4ம்) அதிபதியாகவும் வருவதாலும் அதில் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகின்றது. வியாழன் ஏழாம் (7ம்)அதிபதியாகவும் பத்தாம் (10ம்) அதிபதியாகவும் ஆட்சி பெறுவதால் கேந்திராதிபத்ய தோஷத்தை செய்கிறது.
கடக லக்னத்திற்கு – நான்காம் (4ம்) பாவகத்தில் சுக்ரன் அமர்ந்து ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை தருகிறது.
சிம்ம லக்னத்திற்கு – பத்தாம் (10ம்) அதிபதியாக சுக்ரன் அமர்ந்து ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்தும்.
கன்னி லக்னத்திற்கு – நான்காம் (4ம்) அதிபதியாகவும் பத்தாம் அதிபதியாகவும் வியாழன் ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை செய்கிறது. அதேபோன்று, புதன் லக்னத்தின் அதிபதியாகவும் (1ம்) பத்தாம் (10ம்) பாவகத்தின் அதிபதியாகவும் ஆட்சி, உச்சம் பெற்ற அமைப்புகளில் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகின்றது.

துலாம் லக்னத்திற்கு – பத்தாம் (10ம்) இடத்தில் சந்திரன் அமர்ந்து ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்தும்.
விருச்சிக லக்னத்திற்கு – சப்தம ஸ்தானத்தில் (7ல்) சுக்ரன் அமர்ந்து ஆட்சி உச்சம் பெற்று அமரும் பொழுது கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்துகின்றது.
தனுசு லக்னத்திற்கு – லக்னத்திலும் (1ல்) நான்காம் பாவகத்திலும் வியாழன் ஆட்சி உச்சம் பெற்று அமரும் பொழுது கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்தும். அதேபோன்று, சப்தம (7ம்) பாவகத்திலும் பத்தாம்(10ம்) பாவகத்திலும் புதன் அமர்ந்து கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்படுத்தும்.
மகர லக்னத்திற்கு – சப்தம (7ம்)பாவகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை தரும். அதுபோலவே, பத்தாம் (10ம்) பாவகத்தில் சுக்ரன் ஆட்சி பெற்று அமரும் பொழுது கேந்திராதிபத்ய தோஷத்தை தரும்.
கும்ப லக்னத்திற்கு – நான்காம் (4ம்) பாவகத்தில் சுக்ரன் ஆட்சி பெற்று கேந்திராதிபத்ய தோஷத்தை செய்யும்.
மீன லக்னத்திற்கு – லக்ன(1ம்) பாவகத்தில் மற்றும் பத்தாம் (10ம்) பாவகத்தில் வியாழன் அமர்ந்து கேந்திராதிபத்ய தோஷத்தை செய்யும். அதே போன்று நான்காம் (4ம்)பாவகத்திலும் சப்தம (7ம்) பாவகத்திலும் புதன் அமர்ந்து கேந்திராதிபத்ய தோஷத்தை தரும்.

The post கேந்திராதிபத்ய தோஷம் appeared first on Dinakaran.

Related Stories: