ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி

பெய்ரூட்: கடந்த ஆண்டு அக்டோபர்7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக,காசா மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியது. 9 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஈரான் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கலந்து கொண்டார். பின்னர் ஹனியே தனது வீட்டுக்கு சென்றார்.அப்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் உயிரிழந்தார்.

இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டர் யாஹ்யா சின்வர். ஆனால் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் மிதவாத தலைவர் ஆவார். அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் இஸ்மாயிலுக்கு இஸ்ரேல் ராணுவம் குறி வைத்தது. கடந்த 2019ல் இருந்து கத்தார் தலைநகர் டோகாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அடிக்கடி துருக்கி, ஈரான் நாடுகளுக்கு சென்று வந்தார். கடந்த 2006ல் பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. அப்போது காசாவின் பிரதமராக ஹனியே பதவி வகித்தார்.

பழிவாங்குவோம் என ஈரான் அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை. ஹனியே எங்கள் நாட்டின் விருந்தாளியாக இருந்தார். இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

The post ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: