இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு தலை மற்றும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளை பார்வையிட சென்றபோது சோகம்.. கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!! appeared first on Dinakaran.