சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடையாறு கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள வேளச்சேரி துணை மின் நிலைய வளாகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின் சார்ந்த பிரச்னை மற்றும் குறைகளை தெரிவித்து விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடையாறு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.