எந்த நாடும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது: சீனாவுக்கு குவாட் கூட்டமைப்பு குட்டு


டோக்கியோ: குவாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், ஜப்பான் வெளியுறவு துறை அமைச்சர் யோகோ காமிகாவா, ஆஸ்ரேலியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் நான்கு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் கிழக்கு மற்றும் தென் சீன கடலில் அதிகரித்து வரும் சூழ்ச்சிகள், கடலோர காவல்படை, கடல்சார் ஆயுத கப்பல்களின் ஆபத்தான பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தினார்கள். எந்த நாடும் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தாத பிராந்தியத்தை நோக்கி செயல்படுவதாக குவாட் நாடுகள் உறுதியளித்தன.

The post எந்த நாடும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது: சீனாவுக்கு குவாட் கூட்டமைப்பு குட்டு appeared first on Dinakaran.

Related Stories: