டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் இயங்கி வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளநீர் புகுந்தது. இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் ஆகிய 3 பேரும் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post டெல்லி ஐஏஎஸ் கோச்சிங் சென்டரில் புகுந்த மழை நீர்.. 3பேர் பலி…மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.