×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை குறை கேட்பு கூட்டம்: அமைச்சர் தகவல்

 

காஞ்சிபுரம் ஜூலை 29: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற கூட்ட தொடர், விக்கிரவாண்டி இடை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாதந்தோறும் எனது தலைமையிலும், கலெக்டர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த “குறை கேட்பு கூட்டம்” கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் உள்ளது.

இந்த நிலையில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த குறை கேட்பு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்திலும், அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்திலும் நடைபெற உள்ளது. கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை குறை கேட்பு கூட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram, Chengalpattu district ,Kanchipuram ,Kanchipuram, ,Chengalpattu district ,Minister ,Thamo Anparasan ,
× RELATED பரந்தூர் விமான நிலைய நிலம் எடுப்பு...