×

தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க சரியான திட்டம் செயல்படுத்த வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: 1 டி.எம்.சி. தண்ணீரை தினம் தமிழகத்திற்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. 1 டி.எம்.சி. தர மறுத்தபோது, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது. இதை பார்க்கும் பொழுது அரசின் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி நிரூபிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில், இனிமேலாவது இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீருக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.

The post தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க சரியான திட்டம் செயல்படுத்த வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Premalatha ,CHENNAI ,DMUDI ,General Secretary ,T.M.C. ,Supreme Court ,Karnataka government ,1 TMC ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...