கோமபுரம் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

 

கந்தர்வகோட்டை,ஜூலை 27: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கோமபுரம் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கோமபுரம் ஊராட்சியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டபட்ட ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டி தர வேண்டும் என பெற்றோர்கள் சம்பந்தபட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பள்ளியின் இரு ஆசிரியர்கள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 40 மாணவ- மாணவிகள் கல்வி பயிலுவதாக தெரிய வருகிறது. இப்பள்ளியானது செங்கிப்பட்டி- கந்தர்வகோட்டை சாலையில் உள்ளதால் மிகுந்த போக்குவரத்து உள்ள சாலையாக இருப்பதால் இப்பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி குழந்தைகளை காக்க வேண்டும் எனவும் மேலும் கழிவறை அற்ற பள்ளி வளாகத்திற்கு ஊராட்சி மூலம் தண்ணீர் வசதி செய்து கொடுத்து கழிவறையும் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோமபுரம் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: