எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் நிர்ணயித்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் குரூப் ஏ பிரிவில் பதவி உயர்வு பெற்ற எஸ்சி, எஸ்டி ஊழியர்களின் பிரதிநிதித்துவம் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை (எஸ்சிக்கு 15%, எஸ்டியினருக்கு 7.5%) விட குறைவாக உள்ளது என்பதை நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் சி, டி பணியிடங்களிலும் காணப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்ய, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கென பிரத்யேகமாக துறைத் தேர்வுகள் மூலம் நேரடி ஆட்சேர்ப்பு நடத்தி, நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்களுக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதி செய்துள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.  இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.

The post எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் நிர்ணயித்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: