மாரியம்மன் கோயில் திருவிழா

தேன்கனிக்கோட்டை, ஜூலை 25: தேன்கனிக்கோட்டை மாரியம்மன் கோயில் விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேன்கனிக்கோட்டையில் ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோயில் விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டும், கிரேன்களில் அந்தரத்தில் தொங்கியபடியும், பல்வேறு பெண் தெய்வங்கள் போல் வேடமிட்டு மேள, தாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். நேதாஜி ரோடு, ஓசூர் ரோடு, பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை வழியாக தேர்பேட்டையில் உள்ள மந்தை மாரியம்மன் கோயில் வரை சென்று, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பக்தர்கள் கூட்டத்தையொட்டி டிஎஸ்பி ரவிகுமார்(பொ) தலைமையில், இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்ஐகள் பட்டு, கணேஷ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: