பட்ஜெட் பாகுபாடு குறித்து விவாதிக்க திமுக, காங். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

டெல்லி : பட்ஜெட் பாகுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். மதுரை எய்ம்ஸ், 2 வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வலியுறுத்தி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

The post பட்ஜெட் பாகுபாடு குறித்து விவாதிக்க திமுக, காங். ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: